Posts

நினைவாகியவள் 5&6

                                   5 காலை மணி பத்தை  நெருங்க சாருலதா வின் தந்தையோ மகளைக்கானது மனம் தவிக்க ஆரம்பித்தார். அவரின் பழைய பட்டன் போனில் மீண்டும் மீண்டும் மகளுக்கு முயற்சிக்க லானார். ரிங் போய்க்கொண்டே இருக்க அவருக்கு பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.  'பொண்ணுக்கு என்ன ஆச்சு? இந்நேரம் வந்திருக்குமே ?பணம் கட்டணும் மருந்து வாங்க பணம் வேணும் ?அவசரத்துல கொஞ்சம் எடுத்துட்டு வந்தோம் அதுவும் அட்மிஷனுக்கு கட்டியாச்சு இனி பொண்ணு கொண்டு வந்தால்தான் என்ன பண்றது'... என யோசித்தபடியே அவர் நிற்க…. "இங்க தேவிகாவோட அட்டெனர் யாரு" என மருத்துவமணை  பெண்மணி அழைக்க ராமன் பதட்டத்துடனே "நாந்தானுங்க"…..என் குரல் கொடுத்த படி அந்த எழுபது வயது மதிக்கத்தக்க மனிதர் சிறு தள்ளாட்டத்துடன் அப்பெண்ணிடம் அருகில் சென்றார்.. "இப்ப டாக்டர் ரவுண்ட்ஸ் வருவார் நீங்க எங்கேயும் போயிடாதீங்க இங்கேயே நில்லுங்க அப்புறமா இது நைட்டு உங்க மனைவிக...

நினைவாகியவள்...ep 1-4

 நினைவாகியவள்....   1    வார இறுதியில் அதிகாலை நேரம்..டிசம்பர் மாதக்குளிருடன் மழையும் வலுக்க ,கோவையின் பிரதான சாலை உக்கடத்தில் இருந்து பேரூர் செல்லும் சாலையில் மிக வேகமாக தனது இருசக்கர வாகனத்தில்  தனது கருமை நிற ரெயின் கோட் டையும் மீறி மழையில் நனைந்தபடி உடல் வெடவெடக்க அழுகையுடனே தனது வாகனத்தை  இயக்கி வந்தாள் சாருலதா.  அவளின் எண்ணம் முழுவதும்  மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயின் நியாபகம் மட்டுமே.அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டாலும் ஏனோ அவளுக்கு அழுகை மட்டும் நின்றபாடில்லை. நேற்று ஏதிர்பாரமல்  நடந்துவிட்ட அசம்பாவித சம்பவத்தால் இன்று தனது  தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இரவு முழுவதும் மருத்துவமனையில் கழித்துவிட்டு தனது தாயின் உடல்நலம் தேறிவிட இதோ தாய்க்கு தேவையான உடுப்புகளையும் ,மருத்துவ செலவுக்கு தேவைப்படும் பணத்தை எடுத்துவர சென்று கொண்டிருக்கிறாள். பேரூரை அடைந்தவள் சிறுவாணி மெயின் ரோட்டில் தனது வாகனத்தை செலுத்தும் பொழுது மழை கொஞ்சம் வேகம் எடுக்க வாகனத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. உடைகள் ஈரமான காரணத்தினாலும் ம...