Posts

Showing posts from September, 2020

நினைவாகியவள் 5&6

                                   5 காலை மணி பத்தை  நெருங்க சாருலதா வின் தந்தையோ மகளைக்கானது மனம் தவிக்க ஆரம்பித்தார். அவரின் பழைய பட்டன் போனில் மீண்டும் மீண்டும் மகளுக்கு முயற்சிக்க லானார். ரிங் போய்க்கொண்டே இருக்க அவருக்கு பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.  'பொண்ணுக்கு என்ன ஆச்சு? இந்நேரம் வந்திருக்குமே ?பணம் கட்டணும் மருந்து வாங்க பணம் வேணும் ?அவசரத்துல கொஞ்சம் எடுத்துட்டு வந்தோம் அதுவும் அட்மிஷனுக்கு கட்டியாச்சு இனி பொண்ணு கொண்டு வந்தால்தான் என்ன பண்றது'... என யோசித்தபடியே அவர் நிற்க…. "இங்க தேவிகாவோட அட்டெனர் யாரு" என மருத்துவமணை  பெண்மணி அழைக்க ராமன் பதட்டத்துடனே "நாந்தானுங்க"…..என் குரல் கொடுத்த படி அந்த எழுபது வயது மதிக்கத்தக்க மனிதர் சிறு தள்ளாட்டத்துடன் அப்பெண்ணிடம் அருகில் சென்றார்.. "இப்ப டாக்டர் ரவுண்ட்ஸ் வருவார் நீங்க எங்கேயும் போயிடாதீங்க இங்கேயே நில்லுங்க அப்புறமா இது நைட்டு உங்க மனைவிக...