நினைவாகியவள்...ep 1-4

 நினைவாகியவள்.... 
1
  
வார இறுதியில் அதிகாலை நேரம்..டிசம்பர் மாதக்குளிருடன் மழையும் வலுக்க ,கோவையின் பிரதான சாலை உக்கடத்தில் இருந்து பேரூர் செல்லும் சாலையில் மிக வேகமாக தனது இருசக்கர வாகனத்தில்  தனது கருமை நிற ரெயின் கோட் டையும் மீறி மழையில் நனைந்தபடி உடல் வெடவெடக்க அழுகையுடனே தனது வாகனத்தை  இயக்கி வந்தாள் சாருலதா. 
அவளின் எண்ணம் முழுவதும்  மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயின் நியாபகம் மட்டுமே.அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டாலும் ஏனோ அவளுக்கு அழுகை மட்டும் நின்றபாடில்லை.

நேற்று ஏதிர்பாரமல்  நடந்துவிட்ட அசம்பாவித சம்பவத்தால் இன்று தனது  தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இரவு முழுவதும் மருத்துவமனையில் கழித்துவிட்டு தனது தாயின் உடல்நலம் தேறிவிட இதோ தாய்க்கு தேவையான உடுப்புகளையும் ,மருத்துவ செலவுக்கு தேவைப்படும் பணத்தை எடுத்துவர சென்று கொண்டிருக்கிறாள்.

பேரூரை அடைந்தவள் சிறுவாணி மெயின் ரோட்டில் தனது வாகனத்தை செலுத்தும் பொழுது மழை கொஞ்சம் வேகம் எடுக்க வாகனத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. உடைகள் ஈரமான காரணத்தினாலும் முகத்தில் வழிந்தோடும் மழைநீரினாலும் அழுகையினுடனே ரோட்டின் ஒரம் இருந்த ஒரு கட்டிடத்தின்வாசலில் நிறுத்தினாள்..அவளின் தாய் வீடு இன்னும் சிறிது துரமே தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமம்...விவசாயத்தை நம்பி மட்டுமே வாழும் மக்கள்…
வண்டியை சைடு ஸ்டான்ட் போட்ட படி அங்கு தெரிந்த சிறிது வெளிச்சத்தை பயன்படுத்தி வண்டியின் இருக்கையின் பின்பகுதில் இருந்த தனது தோள்பையில் இருந்து தனது  செல்பேசியை எடுத்து நேரம் பார்க்க மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. 
 நேரம் பார்த்தவள் தனது கணவனுக்கு அழைக்கலாமா என யோசித்து கொண்டிருக்கும் போதே தனது தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்று காதில் வைக்கவும் எதிர்முனையில் 
"கண்ணு"என்று தந்தையின்  ராமனின் குரல் சிறு நடுக்கத்துடன்…
"அப்பா என்ன ஆச்சுப்பா? அம்மாக்கு ஒண்ணும் " என  இவளின் குரலும் பதட்டம் கலந்த அழுகையினுடனே
"அய்யோ ஒன்னும் இல்ல கண்ணு…..
அம்மா நல்லா இருக்கறாப்படி..இப்போதான் ஆருக்கும் தெரியாம போய் பார்த்தேன் நல்லா துங்கிட்டு இருக்கறாசாமி...சாரும்மா இப்போ எங்கிருக்கற…. வீட்டுக்கு போய்ட்டியானு கேக்கத்தான் கூப்பிட்டேன் சாமி…
 ஏன்னா இங்க ஒரே மழை நீ வேற கிளம்பிட்டியா இங்க எனக்கு மனசே கொள்லல..….."
"இல்லப்பா இப்போதான் மெயின் ரோடு தாண்ட போறேன் பா அப்புறம் நம்ம வூட்டக்கு போற  ரோட்ட‌ புடிச்சா பத்து நிமிஷம் தான் பா வேற எதாவது எடுத்துட்டு வரனுங்களாப்பா?"
"இல்லம்மா சுருக்கா வூடு போய் சேரும்மா போய்ட்டு மாப்பிள்ளைக்கு ஒரு ஃபோன் போட்டு சொல்லிடு கண்ணு"..என்றார் அந்த கிராமத்து தந்தை..
"சரிங்கப்பா….
 அப்பா காலைல நா வர லேட்டாச்சின்னா  கடையில ஏதாவது டிபன் வாங்கி சாப்பிடுங்கப்பா'…என் தன் தந்தையிடம் கூறியவள் மொபைல் அணைத்தபடி அதன் இடத்தில் வைத்தவள் வாகனத்தின் இருக்கையை சரி செய்த படி சிறிது நேரம் மழையை வேடிக்கை பார்த்த படியே தனது கணவன் சித்தார்த்தின் நினைவினில் முழ்கினாள்.
'ஃபோன் பண்ணி சொல்லலாமா ,
இல்ல வேணாம் ..பாவம் நல்லா தூங்கிட்டு இருப்பாங்க நாம் ஏன் தேவை இல்லாம அவர  இப்போ டிஸ்டர்ப் பண்ணிகிட்டு  அம்மா நல்லாதான் இருக்காங்க ..இந்த டைம்ல இப்படி இங்க நிக்கறோமுன்னு தெரிஞ்சா ரொம்ப கோபபடுவாங்க அதும் இல்லாம ஏன் எனக்கு முதல்லயே சொல்லலனு திட்டு வேற கிடைக்கும் 'என எண்ணியபடியே தான் அணிந்திருந்த ரெயின் கோட்டை காதலுடன் தடவி கொடுத்தாள்.இது போல் ஒரு மழை நாளில் தான் அவள் கல்லூரியில் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில்  சித்தார்த்தை சந்தித்தது...
சாரு லதா  கோவையில் பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருக்கும் போது தான், 
மழை நான் வரவா ,என கேட்டுக் கொண்டிருக்கும்  நாளிள், தான் செல்லும் பேருந்திற்க்காக காத்திருக்கும் பொழுது தான் முதல் முறை சித்தார்த்தின் அறிமுகம்.சராசரி உயரத்துடன் கண்ணியமான தோற்றத்துடன்..அவன் ஆடையின் மேல் ஒரு கருமை நிற ரெயின் கோட்டுடன்
 தனது விலைஉயர்ந்த இருசக்கர வாகனத்தில் அவளருகில் வந்தவன்,அவளிடம் 
"மழை வருவது போல் உள்ளது நீ தப்பா நினைச்சிக்கிடலன்னா நா வேணா உன்ன ட்ராப் பண்ணவா"? என அதிரடியாய் அவன் கேட்க. யார் என்றே தெரியாத ஒர் அந்நிய ஆடவன் தன்க்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறவும்,
பாவையவளோ 
"இல்ல பஸ்லயே போய்க்கறேன் என் பயந்தபடியே கூறினாள்"..
"இல்ல மழை வர்ற மாதிரி இருக்கே நீ வேற தொண்டாமுத்தூர் வரை ரெண்டு பஸ் மாறி போகனுமே அதான் கேட்டேன்."எனக்கூற
அவள் ஆச்சர்யமாக அவனை நோக்கினாள்.
சித்தார்தோ "என்ன அப்படி பார்க்கற. எப்படி தெரியும்னா அதான் ஒன்றரை வருடங்களா உன்னைப்பாலோ பண்ணறேனே "என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவ்விடத்தை விட்டு அவள் நகர ஆரம்பித்தாள்...  
"அவனோ பதறியபடி ஏய் சாரு பயப்படாத நா மோதல்ல என்னை பற்றி சொல்லிடறேன் அப்புறமா ஒட்டுக்கா பயந்துக்கோ."
"என் பேரு சித்தார்த். ஆர் .எஸ்.புரத்தில வீடு.அம்மா ஹவுஸ்ஒய்ப்.அப்பா எலக்ட்ரானிக்ஸ் அயிட்டம் ஹோல்சேல் டீலர்.நல்ல வருமானம்.சொந்த வீடு.
 எனக்கு ஒரு தம்பி பக்கத்தில் இருக்கற காலேஜ்ல முதலாம் ஆண்டு படிக்கறான்." 
"ஒரு தங்கச்சி இப்போதான் ப்ளஸ் டூ படிங்கறா. நா இங்கதான் எம் இ ஃபைனல் இயர் படிக்கறேன்.
நீ வந்த அன்னைக்கு இருந்து நா உன்ன மட்டும்தான் பாக்கிறேன் தெரியுமா"? 
" நீ யாரோடையும் அதிகமா பேசறது இல்ல",
"நீ உண்டு உன் படிப்பு உண்டுனு இருக்கற".
"பெருசா உன் புற தோற்றத்துக்கு மதிப்பு தர்றது இல்ல"…
"ரொம்ப நல்லதா நீ டிரஸ் போட்டுகூட நான் பாக்கல".
"அது மட்டும் இல்ல தனியா இருந்தா எப்ப பாரு ஏதாவது புக்க தொறந்து வச்சிகிட்டு உக்காந்திருக்க.
.காலையில் ஏதோ ஒரு நாள்  யாரோ ஒருத்தர் கார்ல வந்து ட்ராப் பண்ணறாரு .ஈவினிங் நீயே பஸ்ல போய்க்கற..
இது எல்லாம் தான் எனக்கு உன்ன பாக்க வச்சது போதுமா"..என அவன்கூறி முடிக்கவும்..மழை சிறு துளிகளாக   விழ தொடங்கியது..
"நானும்  என் பிரண்டும் ஒரு நாள் உன் பஸ்சை ஃபாலோ பண்ணி வந்தோம்
நீ தொண்டாமூத்தூர் வரை போறத அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்.உன் கூட படிக்கறவங்களுக்கு கூட நீ உக்கடம் வரை போறது தான் தெரியுது..! அந்த அளவுக்கு நீ உன் பர்சனல் விஷயத்தை கூட யார் கிட்டேயும் சேர் செய்யறது கிடையாது".
 
"இன்னைக்குதான் தான் எனக்கு உன்கிட்ட பேச தைரியமே வந்துருக்கு அதனால் நா சொல்ல வந்தது இப்போவே சொல்லிடறேன்"..என் அவன் சிறிது தயக்கத்துடன் 
"அது வந்து"……
"நா "…….
"அது… உன்னை"…
என அவன் ஆரம்பிக்கவும் அவளின் பஸ்வரவும் சரியாக இருந்தது.
அவள் பஸ்சை நோக்கி நகரப்போக  அவனோ அவசரமாக 
"ஏய்"….
"சாரு" ..
'என்ன'?
என்பது போல் அவள் பார்க்க," மழை வேகமாக வருவது போல் இருக்கு நீ  வீட்டுக்கு போறதுக்குள்ள புல்லா உன் டிரஸ் நனைஞ்சிடும் இந்தா இதை போட்டுக்கோ" என. 
அவள் அனுமதியை ஏதிர்பார்க்காமலே தன்னுடைய ரெயின் கோர்ட்டை கழட்டி அவளின் மீது போர்த்தி விட்டவன்.கண் இமைக்கும் நேரத்தில் தனது இரு சக்கர வாகனத்தை இயக்கி படியே அவளை கடந்து சென்று விட்டான். 
 
ஒரு  காய்கறி சரக்கு வாகனம் ஒன்று ஹாரன் அடித்தபடி அவளை கடந்து செல்ல
பழைய நினைவுகளின் இருந்து மீண்டவள். தனது கைகளை நீட்டி மழை குறைந்ததா எனறு பார்த்தவள்…
மழை கொஞ்சம் மட்டு பட   தனது இருச்சக்கர  வாகனத்தை இயக்க ஆரம்பித்தாள்..
'மாப்பிள்ளைக்கு ஒரு ஃபோன் போட்டு சொல்லிடு கண்ணு' என்ற தன் தந்தையின் குரல் காதில் ஒலிக்க தானாக அவளின் இதழ் புன்னகைத்து. 
                             2              
அருண் தனது சொகுசுக்காரை தொண்டாமுத்தூரில் உள்ள தனது  நண்பனின் பண்ணை விட்டில்  இருந்து சிறுவாணியை நோக்கி  வாகனத்தை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.
இரவு முழுவதும் நண்பனின் பேச்சுலர் பார்ட்டியில் விடிய , விடிய போட்ட ஆட்டத்தினாலும் மதுவின் போதையாழும்  பாதையை விட்டு அவ்வப்போது அவனது வாகனம் தடுமாற.. போதையின் உடனே வாகனத்தை இயக்க ஆரம்பித்தான்.
இருபுறமும் பல செல்வந்தர்களின் பண்ணைவீடுகள்..அங்கங்கே கேளிக்கைகளில் சத்தம் கேட்ட வண்ணம் வண்டியை இயக்கி
 வந்தவன்  ஒரு திருப்பத்தில் முன்புறம் 
 மங்கலான வெளிச்சத்தில் சாருலதா  இருசக்கர வாகனத்தில் செல்வதை கண்டவன்  இதழ் தானாக விசில் அடித்தது.. 
"பார்ரா இள்ளோ காலைல பட்சி யோட தரிசனம்."
அவனின் கண்கள் போதையின் உச்சத்தில் தெளிவில்லாத மங்கலாக சாருவை காட்ட அவளை அருகில் சென்று பார்க்கும் ஆவல் பெருகியது..
கைகள் தானாக காரை அவள் பக்கம் இயக்க ஆரம்பித்தது.அருகில் செல்ல எண்ணியவன் அவள் அருகில் சென்று விடாது ஹாரன் கொடுக்க சாருலதாவோ  பயந்து இடபுறமாக செல்ல  இவன் விடாது அவள் அருகில் மீண்டும் செல்ல அவள் தனது வாகனத்தை வேகமாக இயங்க ஆரம்பித்தாள். அவள் வேகம் எடுக்க இவனின் ஈகோ சீண்டப்பட இவனும் வேகம் எடுக்க போதையின் உச்சத்தில் இருந்தவனால் காரின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவளின் வாகனத்தின் மீது எதிர்பாரா வகையில் மோதினான். மோதிய வேகத்தில் சாருலதா நிலை தடுமாறி ரோட்டின் நடுவில் வந்து விழ ...அவளின் வாகனம் ரோட்டின் இடப்புறம் புதியதாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட ஆறு அடி பள்ளத்தில் மண்சரிவோடு அதுவும் இறங்கலாயிற்று.
கண்இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த எதிர்பாராத இந்த விபத்தில் அருணின் போதை பாதியாக இறங்கியது..பயத்தினால் கைகள் நடுங்க அவளைத்தாண்டி ஓருபத்தடி தூரத்தில் வாகனத்தை நிறுத்தியவன் வாகனத்தின் முகப்பு விளக்கை அணைத்தபடியே தள்ளாடியபடி இறங்கி
 சுற்றும் முற்றும் கவனிக்கலானான்.
யாரும் தன்னை பார்க்கவில்லை என தெரிந்ததும் தைரியம் பெற்றவனாக அந்த அதிகாலை பொழுதின் மங்கலான வெளிச்சத்தில் போதை ஏறிய கண்கள் உடன் தெளிவில்லாத பார்வையால்   காரின் அருகில் இருந்தே சாருவை கவனிக்க சாருவோ கீழே ஒரு காலை நீட்டியபடியும் மறு காலை மடித்தபடியும் ஒரு கையை இடுப்பினின் வைத்த படி மறுகையின் உதவியுடன் தரையில் கை வைத்து தவழ்ந்த படி அவனிடம் உதவி கேட்டபடி   அவனை நோக்கி வர   அவனோ அதை கவனிக்கா வண்ணம்  காரில் ஏறி எதிர்ப்புறம் தெரிந்த ஒரு திருப்பத்தில் வேகமாக பயனிக்கலானான். 
சார் பிளீஸ் போகாதிங்க எனக்கு உதவி பண்ணுங்க நா யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன் பிளீஸ் சார் என்ன வீட்டுட்டு போயிடாதிங்க…. .என கெஞ்சியபடியே கத்தலானாள் . அவனின் கார் அவ்விடத்தை விட்டு செல்லும் வரை சிறிது தூரம்  தவழ்ந்த படியே வந்தவள் முடியாமல் அப்படியே தரையில் குப்புற படுத்தாள்.
தரையில் படுத்தவளின் கைகள் தானாக தனது பின் மண்டைக்குச்
 செல்ல  அங்கு நிற்க்காமல் சிறிதளவு இரத்தம் வழிந்தது கொண்டிருந்தது.தன்நிலைகண்டு கலக்கியவள்  கடவுளிடம் தஞ்சம் புகுந்தாள்.
கடவுளே என்னைக்காப்பாற்று என கடவுளை வேண்டிக்கொண்டவள் .
 தனது செல்பேசியில் யாரையேனும் அழைக்கலாமேன படுத்த படியே தனது இருசக்கர வாகனத்தை தேடினாள்.ஆனால் வாகனமோ பள்ளத்தில் முழுவதுமாக இறங்கி இருந்தது.தன்னால் அவ்வளவு தூரம் செல்லவும் முடியாது.அப்படியே அங்கு சென்றாலும் வாகனத்தை தூக்கும் சக்தி தனக்கில்லை என புரிந்து கொண்டவள்..
வாய் விட்டு அழுத படியே 
"சாரிம்மா,சாரிப்பா,என்ன மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்டவள் இறுதியாக தன் காதல் கணவனை நினைத்தபடி சாரி சித்..என்ன மன்னிச்சிடு நேத்தே உனக்கு ஃகால் பண்ணியிருந்தா இது எதுவுமே நடந்திருக்காது ..கடவுள் ஆசிர்வதிச்சா நான் மீண்டு வந்தா நீ சொன்ன மாதிரி யாரும் வாழாத ஒரு வாழ்க்கைய வாழ்வோம்...எனக்கு ஒன்னும் இல்ல, நா நல்லாதான் இருக்கேன் ,எனக்கு ஒன்னும் ஆகாது ,என் தனக்கு தானே தைரியம் சொல்லிய படியே மிக மெதுவாக மயங்கநிலைக்கு செல்லலானாள்...சாருலதா….
       ‌.                   3
வேகமாக வீடு வந்து சேர்ந்த அருணோ காரின் இயக்கத்தை நிறுத்திய படி பதட்டத்துடன் காரை வீட்டு இறங்கியவன் காரின் முன்புறம் சென்று ஆராய ..
சாருவின் ஸ்கூட்டியில் மோதியதற்கான சிறு அடையாளமாய் பம்பரில் மிகச்சிறிய அளவில் சிறு ஒடுசல் இருக்க.. தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டவன். தன்னுடைய  கை கடிகாரத்தில் மணி பார்க்க அது ஐந்தைக்காட்ட
"இப்போ யாராவது அவள பாத்து இன்னேரம் ஹாஸ்பிடல் ல சேர்த்திருப்பாங்க ...அட்லிஸட் ஆம்புலன்ஸ் க்கு ஃகால் பண்ணிருக்கலாமோ"….
'அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிஇருக்குமா?'
'இல்ல அப்படி ஏதும் ஆகியிருக்காது. அவ நல்லாதான நம்மள பாத்து ஹெல்ப் கேட்டா?'
'அனேகமாக இடுப்பில் அடி பட்டிருக்கலாம் அதான் அவளால் நடக்க முடியலபோல …'
"சாரி பேபி" என வாய்விட்டு கூறியவன்
'போலிஸ் கிட்ட சொல்லிட்டா
என் யோசித்தேன்
சோ வாட் அதான் அப்பா இருக்காங்கல்ல அப்புறம் எனக்கென்ன பயம்'.
"லவ்யூ டாட்"
" அப்பா கிட்ட கூப்பிட்டு இது மாதிரி சின்ன விசயத்தை எல்லாம் சொல்லனுமா என்ன"? 
'தேவையில்லாம எதுக்கு அவருக்கு டென்ஷன்" 
"ஊப்"…என வாய் வழியாக இழுத்து மூச்சு விட்டவன் 
"ஜஸ்ட் ரிலாக்ஸ் ..ஒன்னும் இல்ல" ..
"நீ எங்கேயும் போகல" …
"யார் மேலயும் இடிக்கல ஒகே"..என தனக்குள்ளே பேசியவன்..
தனது பண்ணைவிட்டின் உள்ளே தனது அறைக்கு சென்றவன் ஏசி ஆன்செய்த படியே மெத்தையில் விழுந்தவன்
அவ்விசயத்தை மறந்த படி தூங்கலானான்.
                             
                             4
அதிகாலை மணி ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருக்க தொண்டாமுத்தூர் பகுதிக்கு உட்பட்ட
"பி "2.  காவல்நிலையம்.மழை முழுவதுமாக நின்றாலும் குளிர் அடங்கவில்லை.
 உதவி ஆய்வாளர் மாதவன் தனது இரவு ரோந்துபணியை முடித்துக் கொண்டு காவல் நிலையம் வந்தவர், தொப்பியை கழட்டியயபடியே  ஜுப்பில் இருந்து இறங்கியவர் வண்டியை ஓட்டிவந்த கடைநிலை ஊழியரிடம் 
"நீ வேணா கிளம்புக்கோப்பா  நா வண்டி ஒட்டிக்கொள்கிறேன்.குழந்தைக்கு  ஏதோ முடியலன்னு ஃபோன் வந்ததுல்ல.போய் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வாப்பா சரியா "என கூறிய படியே உள்ளே வந்தவருக்கு வயது நாற்பத்தி ஐந்து.
திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்.நேர்மையானவர் என பெயர் எடுத்தவர்..
நேர்மைக்கே உடைய திமிர் கொண்டவர்.என எல்லோராலும் அறியப்படுபவர்...
உள்ளே நுழைந்தார் தொப்பியை டேபிளின் மீது வைத்து வீட்டு தான் அணிந்திருந்த ஜெர்கினை கழட்டி ஹேங்கரில் மாட்டியவர். அப்போழுதுதான்  அங்கு சில இளைஞர்கள் குத்துக்காலிட்டு அமர்த்து இருப்பதை கவனித்தார். 
"யோவ்  ஒரு டீ சொல்லுய்யா" என ஒரு காவலரிடம் சொல்லியவர்.
"அப்பா என்னா குளிரு என்னா மழை ச்சை ...என்ன பொழப்பு இது நிம்மதியா தூங்க கூட முடியல"..
"ச்சை"...என வாய்க்குள்ளே முனங்கியவர்... இருவர் மட்டும் பெஞ்ச்சில் அமர்ந்திருக்க அமர்தவர்களின் அருகில் வந்தவரோ அங்கு  இருந்த எழுத்தரிடம் 
"என்னய்யா கேஸு" என் வினவ  அவரோ சார் 
"இவனுக எல்லாம் ராத்திரி பதினொருமணிக்கு மேல் சந்தேகப்படற மாதிரி சுத்திட்டு இருந்தாங்க சார்".. எனக்கூற பெஞ்ச்சில் உட்காந்தவர்களை பார்த்தபடியே 
"இவங்க ரெண்டு பேரும்" 
எனக்கேட்க 
"சார் டிரிங் அண்ட் டிரைவ் சார் வண்டியை நிருத்தினா ஆர்க்யூ சார்"..என்றவரிடம் 
"அதனால சாருக மட்டும் பெஞ்சில் உக்காருவாங்களா"எனக்கேட்ட படியே  
அங்கிருந்த லத்தியை எடுத்து முழங்காலுக்கு கீழ் அடித்தவர் 
"கீழே குத்தவச்சி உக்காருங்கடா"       
என்றவர்
 "தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டறதே தப்பு இதுல  என்னங்கடா உங்களுக்கு வாக்குவாதம் வேற"…
" உங்க அப்பன் காசு அப்படி உங்கள பேச சொல்லுது".. என்றவர் 
"யோவ் ஏட்டு இவனுக வீட்டுக்கு இன்பார்ம் பண்ணி வர சொல்லுயா.
டிரிங் அண்ட் டிரைவ் னு சார்ஜெட் போட்டு  இவனுக அப்பா வந்தா கைல குடுயா".. என்றவர் 
"உங்க மூனு பேருக்கும் அந்த டைம்ல என்னடா ரோடாடில்  வேலை" எனக்கூறிய படி லத்தியை எடுத்து முழங்காலுக்கு கீழ் அடிக்க அவர்களோ 
"சார் அடிக்காதிங்க சார் வலிக்குது இனி இப்படி சுத்தமாட்டோம்" என கோரஸாக கத்த 
"வீடு எங்கடா" என அடித்தபடியே ஒருவனைக்கேக்க அவனோ 
"இங்கதான் பக்கத்தில்"
என முகவரியைக் கூற
"லோக்கல்  பசங்களாட  நீங்க எல்லாரும்"? எனக்கேட்டபடியே அங்கிருந்த காவலரிடம் 
"என்னய்யா பண்ணி வச்சிருக்க கேஸ் புடிச்சி வையின்னா லோக்கல் பசங்கள புடிச்சி வச்சிருக்க.. ஆமா எதுக்குடா அந்நேரத்துக்கு சுத்தினங்க" என அவர் மிரட்ட அதில் ஒருவன் பயந்தபடியே
"இல்ல சார் இவனுக்கு இன்னைக்கு பர்த்டே அதான் சர்ப்ரைஸ்சா நடுரோட்டில் வச்சி கேக் கட்பண்ணலாமுன்னு கூட்டிகிட்டு வந்து மாட்டிகிட்டோம் சார்"என அவன் அழுகையுடன் விவரிக்க ஓரு வினாடியில் அவரின் கோபம் தனித்து 
"உனக்கு பிறந்தநாளா? இன்று என அவன் கை காட்டியவனிடம் கேட்க"..
 ஆம் என பயந்தபடியே தலை யாட்டினான்.
அவரோ "ம்ம்….சரி இந்த பொறந்த நாளை வாழ்க்கையில் என்றுமே மறக்கக்கூடாது.. இனி யாரையாவது ராத்திரி பத்துமணிக்கு மேல் ரோட்டில் பார்த்தா அவ்ளோதான்" எனக்கூறிய படியை 
"யோவ் கான்ஸ்டபிள் இவனுக கிட்ட அட்ரஸ் வாங்கிட்டு அனுப்பி விடுயா".என்றவர்
"ஏய் ஒரு நிமிஷம்" என பிறந்தநாள் கொண்டாடும் இளைஞனிடம் 
"விட்ல கேட்டா என்ன சொல்லுவ ...என  கேட்க  அவனோ என்ன கூறுவது என முழித்தவனிடம் 
"உண்மையை சொல்லு புரியாதா அப்போதான் நீ வெளியே வரனும்னு ஆசை பட்டாலும் வீட்டில் கண்டிப்பாங்க".எனக்கூறி அவனை அனுப்பி வைத்தவர் .
"டீ சொல்ல சொன்னேனே இன்னுமா வரல'? என  காவலரிடம் வினவ 
"இதோ வந்திடுச்சி சார் "என்றவர் டீயை அவரிடம் தர 
"உங்களுக்கு சொல்லலையா"? என கேட்டபடி  டீயை உதட்டருகில் கொண்டு செல்லவும்  அவரின் இடுப்பில் சொருகப்பட்டிருந்த வாக்கிடாக்கியில் குரல் வழி செய்தி கண்ட்ரோல் ரூமில் இருந்து வந்தது.
"ஹலோ  கண்ட்ரோல் ஹியர் ..ஓவர் ...ஒவர்...சிறுவானி டூ பேரூர் மெயின் ரோட்டில் ஓரு பொண்ணு அடி பட்டு கிடக்கறதா மேசேஜ் வந்திருக்கு என்னனு உடனே போய் பாருங்க ஒவர்"….
என முடிக்க டீயை டேபிளில் வைத்தவர்   
"ஏட்டு கூட வாங்க அப்படியே ஆம்புலன்ஸ் க்கு ஃகால் பண்ணி ஸ்பார்ட்க்கு வரசொல்லுங்க…பக்கத்துல யாராவது ஆன் டியூட்டி ல இருந்தா ஸ்பாட்டுக்கு உடனே போக சொல்லுங்க" என்று வேளியே வர ஜீப்பில் டிரைவர் அமர்ந்திருந்தார்.
"என்னப்பா உன்னை வீட்டுக்கு போக சொன்னேன்ல!" எனக்கேட்க 
"இல்லசார் பாப்பாக்கு இப்போ பரவாயில்லையாம் அவளே பாத்துக்கறேனுட்டா அதான் டியுட்டு முடிஞ்சே போயிக்கலாம்னு இருக்கேன் சார்" எனக்கூற 
"போலீஸ் காரனுக்கு எப்பவுமே டியுட்டி முடியாதுயா நீ புதுசு இல்லையா அதான் உனக்கு தெரியல போகப்போக தெரிஞ்சிப்ப"
"இப்போ வா மறுபடியும் நம்மை கடமை அழைக்கிறது "எனக்கூறிய படியே வண்டியில் ஏற பின்புறம் ஏட்டுவும் உதவிக்கு ஓரு  பெண் கான்ஸ்டபிளும் வந்து அமர வண்டி வேகமெடுத்தது..
அவர்கள் வந்து சேரும் போழுது
 சிறு  கும்பல் ஒன்று கூடி இருக்க மாதவனோ கான்ஸ்டபிளிடம் 
"க்ரௌடு கிளியர் பண்ணுங்க" என்று கூறிக்கொண்டே அடிபட்டுக்கிடந்த சாருவின்  அருகே வந்தவர் 
 அவளை ஆராய ஆரம்பித்தார்.
ஒரு கையை நீட்டியபடியும்  வலதுகாலை மடிந்தபடியும் உறங்கும் சிறு குழந்தை யைப் போல் மூர்ச்சையாகி கிடந்தாள்.மழையின் காரணமாக சாலை வெகுவாக சுத்த பட்டிருக்க அவளின் குருதி கலந்த மழைநீர் சாலையோரத்தில் செந்நிறமாக தேங்கி நின்றது.பின் தலையில் ஏற்பட்ட காயத்தின் அடையாளமாய் அந்த இடத்தில் இரத்தம் உறைந்து கருமை நிறத்தை காட்டியது.
அவளின் தளிர் முகம் கண்டவரால் அவரின் மனதைரியத்தையும் மீறிய வார்த்தைகளால் அர்ச்சிக்க தொடங்கினார்.
"வரவர மனிதனுக்கும் தெருநாய்க்கும் வித்தியாசம் இல்லாம போச்சி நடு ரோட்டுல யாரு வேணாலும் அடிச்சி போட்டுட்டு போறாங்க..
 ச்சை "எனத்திட்டியபடியே அவளை நெருங்கியவர் அவளுக்கு மூச்சு இருக்கிறதா என்று இரு விரல்களை வைத்து சோதனை செய்தார்.சந்தேகத்துடனே அவளின் வலது கையில் நாடி  பார்க்க அதில் சிறு துடிப்பு.. அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது…..
அவளுக்கு மூச்சு இன்னும் இருக்கிறது அவளின் உயிர்  உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று தெரிந்தவர் அவசரமாக பெண் காவலரை அழைத்து…. 
"பாரதி கொஞ்சம் சீக்கிரமா இந்த பொண்ணுக்கு ஹார்ட் பிட் இருக்கானு பாரு !சிக்கிரம் "என அவசரப்படுத்த பாரதி சாருவின் ஆடையை நெகிழ்த்தி அவளின் இடது மார்பில்  தனது உள்ளங்கையை வைத்தவள் 
"சார் ஹார்ட் பிட் இருக்குசார்" எனக்கத்த அந்த இடமே பரபரப்பானது...பெண் இறந்துவிட்டாள் என  வேடிக்கை பார்த்தவர்களும்...பணிசெய்த காவலர்களும்  நொடி நேரத்தில் பரபரப்பானார்கள…
"ஆம்புலன்ஸ் என்னாச்சு? ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ணிட்டியா? பாரதி" என பெண் காவலர்களில் கேட்க
"சார் இப்ப தான் சார் ஃபோன் பண்ணினேன் ஆன் தி வே நியர் பை வந்துட்டேன்னு சொன்னாங்க".. என அவள் கூற
"தலைமைக் காவலரை அழைத்து இங்க பக்கத்துல அந்த பொண்ணோட ஏதாவது திங்ஸ் இருக்கான்னு பாருங்க ஏதாவது கிடைக்கும் ஏதாவது மிஸ் பண்ணி இருக்கோமானு  பாருங்க"…. எனச் சொல்லும் பொழுதே ஆம்புலன்ஸ் அங்கு வர 
சாரு ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்ட அப்பொழுதுதான் அவர்  சாருவை கவனித்தார் கண்களில் இருந்து மெல்லிய கண்ணீர்த் துளிகள் உருண்டு கீழே விழுந்தன ...அக்கண்ணீர் துளிகள் அவருக்கு நன்றி தெரிவிப்பது போல் இருக்க..
மனம் கொள்ளாமல் தனது பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து அவளின் கண்களை துடைத்தவர் அவரின் கைபேசியில் அவளை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்..

பெண்காவலரை அவளுடன் ஆம்புலன்ஸில் அனுப்பியவர்..தனது விசாரணையை தொடங்க நினைத்தவர் தலைமைக்காவலரிடம். 
"ஏதாவது எவிடன்ஸ் கிடச்சுதா?..
'எப்படி 
இப்படி நடுரோட்டில்  பொண்ணு அடிப்பட்டு கிடக்குது? யாராவது அடிச்சு கொண்டு வந்து போட்டு இருப்பாங்களா?' 
'இல்ல இந்த வழியா நடந்து வரும்போது யாராவது ஆக்சிடென்ட் பண்ணி இருப்பார்களா?'..  என பல சிந்தனைகள் இருக்கும் பொழுது அருகில் ஒரு போலீஸ் ரோந்து வாகனம் வந்து நிற்க
யாரென திரும்பிப் பார்க்க கம்பீரமான தோரணையில் பி3 காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கேசவன் இறங்கிக் கொண்டிருந்தார்... 
இருவருமே கேசவனை ஆச்சரியத்துடன் பார்க்க என்ன மாதவன் சார்  உங்களுக்கு வேலை ஒன்னும் இல்ல போல….
மாதவன் புருவம் சுருக்கி சிறு கோபத்துடன் அவரை முறைக்க
இல்ல என்னோட ஸ்டேஷன் லிமிட் ல வர்ற இடத்துல நீங்க வந்து வேலை பாக்கறீங்களே  அதான் என்னன்னு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்…என்றவர்
இருவரையும் என்ன என்பது போல் பார்க்க
அப்பொழுதுதான் மாதவனும் தலைமை காவலர் இடத்தை கவனித்தனர் அவர்களின் காவல்நிலையத்தில் எல்லை சில அடிகளுக்கு முன்பே முடிந்திருந்தது..

மாதவனும் தலைமை காவலர் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர் முகத்தில் சிறு புன்னகையுடன் தன்னை கேலியாக நோக்கும் கேசவனைப்பார்த்த மாதவனோ  சாரி மிஸ்டர் கேசவன்  ஒரு ஆக்சிடெண்ட் கேஸ் கண்ட்ரோல் ரூம்ல இருந்து மெசேஜ் சோ உதவி பண்ண வந்தோம்.மக்களுக்கு சேவை செய்ய தானே நாம் இருக்கிறோம் யாரு வந்தா என்ன  நீங்க வர லேட்டாயிடுச்சு நாங்க வந்தோம்... எனக்கூறியவர்..ஓகே சார் பொண்ணு யாருன்னு தெரியாது…
"அடிப்பட்டு  கிடக்கிறதா கண்ட்ரோல் ரூம் ல இருந்து போன் வந்தது... வந்ததும் மூச்சு இருக்கான்னு பார்த்தோம் உயிர் இருந்தது. உடனே ஆம்புலன்ஸில்  ஜிஹெச் அனுப்பி வச்சிருக்கேன் கூட நம்ம பாரதி பொண்ணையும் அனுப்பி வச்சிருக்கேன் இனி மத்தவங்க நீங்க பார்த்துக்கோங்க வேற ஏதாவது வேணும்னா கேளுங்க ஓகே சார் நாங்க கிளம்பறோம். ஆல் தி பெஸ்ட்"
எனக்கூறிய படி டிரைவரையும் ஏட்டு முத்தரசனையும் அழைத்துக்கொண்டு அவர் கிளம்ப…
போகும் அவர்களையே முறைத்துக் கொண்டிருந்த கேசவன் கோபத்தை சக ஊழியர்களிடம் காட்டத் தொடங்கினார்  யோவ்வ்….
அங்க என்னையா வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க 
போய் விசாரிங்கய்யா யாரு என்னன்னு அப்படியே நம்மால் ஒருத்தர் ஜி ஹெச் அனுப்புங்க…..என அவர் சென்று விட சாருவின் ஸ்கூட்டியோ அருகில் தோண்டப்பட்ட வாய்க்கால் போல் தண்ணிர் ஓடிக்கொண்டிருக்கும் அந்தக் குழியில் மௌனமாக தூங்கிக் கொண்டிருந்தது….
 
தொடரும்



























































 



Comments

Post a Comment

Popular posts from this blog

நினைவாகியவள் 5&6