நினைவாகியவள்...ep 1-4
நினைவாகியவள்.... 1 வார இறுதியில் அதிகாலை நேரம்..டிசம்பர் மாதக்குளிருடன் மழையும் வலுக்க ,கோவையின் பிரதான சாலை உக்கடத்தில் இருந்து பேரூர் செல்லும் சாலையில் மிக வேகமாக தனது இருசக்கர வாகனத்தில் தனது கருமை நிற ரெயின் கோட் டையும் மீறி மழையில் நனைந்தபடி உடல் வெடவெடக்க அழுகையுடனே தனது வாகனத்தை இயக்கி வந்தாள் சாருலதா. அவளின் எண்ணம் முழுவதும் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயின் நியாபகம் மட்டுமே.அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டாலும் ஏனோ அவளுக்கு அழுகை மட்டும் நின்றபாடில்லை. நேற்று ஏதிர்பாரமல் நடந்துவிட்ட அசம்பாவித சம்பவத்தால் இன்று தனது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இரவு முழுவதும் மருத்துவமனையில் கழித்துவிட்டு தனது தாயின் உடல்நலம் தேறிவிட இதோ தாய்க்கு தேவையான உடுப்புகளையும் ,மருத்துவ செலவுக்கு தேவைப்படும் பணத்தை எடுத்துவர சென்று கொண்டிருக்கிறாள். பேரூரை அடைந்தவள் சிறுவாணி மெயின் ரோட்டில் தனது வாகனத்தை செலுத்தும் பொழுது மழை கொஞ்சம் வேகம் எடுக்க வாகனத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. உடைகள் ஈரமான காரணத்தினாலும் ம...