நினைவாகியவள் 5&6
5
காலை மணி பத்தை நெருங்க சாருலதா வின் தந்தையோ மகளைக்கானது மனம் தவிக்க ஆரம்பித்தார். அவரின் பழைய பட்டன் போனில் மீண்டும் மீண்டும் மகளுக்கு முயற்சிக்க லானார். ரிங் போய்க்கொண்டே இருக்க அவருக்கு பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
'பொண்ணுக்கு என்ன ஆச்சு? இந்நேரம் வந்திருக்குமே ?பணம் கட்டணும் மருந்து வாங்க பணம் வேணும் ?அவசரத்துல கொஞ்சம் எடுத்துட்டு வந்தோம் அதுவும் அட்மிஷனுக்கு கட்டியாச்சு இனி பொண்ணு கொண்டு வந்தால்தான் என்ன பண்றது'... என யோசித்தபடியே அவர் நிற்க….
"இங்க தேவிகாவோட அட்டெனர் யாரு" என மருத்துவமணை பெண்மணி அழைக்க ராமன் பதட்டத்துடனே
"நாந்தானுங்க"…..என் குரல் கொடுத்த படி அந்த எழுபது வயது மதிக்கத்தக்க மனிதர் சிறு தள்ளாட்டத்துடன் அப்பெண்ணிடம் அருகில் சென்றார்..
"இப்ப டாக்டர் ரவுண்ட்ஸ் வருவார் நீங்க எங்கேயும் போயிடாதீங்க இங்கேயே நில்லுங்க அப்புறமா இது நைட்டு உங்க மனைவிக்கு பொட்ட மருந்தோட லிஸ்ட் இது மெடிக்கல் ஷாப்பில் வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்துடுங்க அப்புறம் இன்னும் கொஞ்சம் பணம் அட்வான்ஸாக கட்டிடுங்க. அப்பதான் டாக்டர் ட்ரீட்மென்ட் பாப்பாரு" எனக் கூறியபடி அப்பெண்மணி சில காகிதங்களை அவர் கையில்
திணித்து விட்டு சென்றார்.
கவலையுடன் அருகில் உள்ள ஒரு சேரில் அமர்ந்து அவர் ஒருவேளை 'பாப்பா மாப்பிள்ளை வூட்டுக்கு எங்காச்சும் போச்சோ' என யோசித்தவர்..
தனது மாப்பிள்ளையின் நம்பரை தேடி டயல் செய்ய முதல் ரீங்கிலே சித்தார்த் ஃகாலை அட்டென்ட் செய்யதவன்…..
"மாமா சாரி நா அங்கதான் வந்துட்டு இருக்கேன்..
கிளம்புற நேரம் வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்துட்டாங்க அதான் கொஞ்சம் லேட் ,
சாருகிட்ட சொல்லிடுங்க நான் வர லேட்டாயிடுச்சுனு, ரொம்ப கோவமா இருப்பா."
"மாப்ள" என பேச்சின் நடுவே குறிக்கிட்டவர்…
"மாப்பிள நானு இங்க ஆசுபத்திரில இருக்கேனுங்க".
"பாப்பா வூட்டுக்கு போச்சுங்க….
இன்னேரமாச்சி ஆனா இன்னு
வரலங்க"எனக்கூற…
தன்னுடைய மாமனார் ஹாஸ்பிட்டல் எனக் கூறவும் சித்தார்த் சாரலதாவைப் புறம்தள்ளியவன்…அவள் வீட்டில் நலமுடன் இருப்பாள் எனும் நம்பிக்கையில்
" ஹாஸ்பிட்டல்லயா யாருக்கு என்ன ஆச்சு.".. என பதட்டத்துடன்
வினவினான்
"ஐயோ ...அத சொல்ல மறந்துட்டேன் பாருங்க"..என்றவர்…..
"உங்க அத்தைக்கு தானுங் மாப்ள" என மேற்கொண்டு கூற எத்தனிக்கையிலே
சித்தார்த் குறிக்கிட்டு
"எந்த ஹாஸ்பிடல்" ...என்று கேட்டவன் பதில் மட்டும் கேட்டவன் அழைப்பை துண்டித்தான்..தன்
பெற்றோர்களிடம் …
"சாரு அம்மாக்கு ஏதோ முடியல போல ஹாஸ்பிடல் ல இருக்காங்க நா போய் என்னனு பாத்துட்டு வர்றேன்" என்று தனது வாகனத்தின் சாவியை கையில் எடுத்த படி கிளம்ப..
அவன் தாய் கவிதாவோ
"இருடா நானும் கூட வர்றேன்" எனக்கிளம்ப..அவனது தந்தை விஸ்வநாதனோ
"கவிதா உனக்கு எத்தனை முறை சொல்லுறது !ஒருத்தர் கிளம்பும்போது அவங்கள தடுக்காதே னு
அவன் மொதல்ல போயி அங்க என்ன பிரச்சனைன்னு பார்க்கட்டும் அதுக்கு அப்புறமா நமக்கு போன் பண்ணதுக்கு அப்புறம் நீயும் நானும் போய் பார்க்கலாம் சரியா"...என் மனைவியை கண்டிக்க தாயின் முகம் வாடுவதைக் கண்டவன் தாயைப் பார்த்து
"சாரி"... என் வாய் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை தாயை பார்த்து வைத்தவன் வெளியே வந்து தனது இருச்சக்கர வாகனத்தை எடுக்க அவனின் தந்தை
"டேய் கார் எடுத்துட்டு போடா" என்றார்.இல்லப்பா
"டிராஃபிக்ல மாட்டிப்பேன் இதுதான் அவசரத்துக்கு சரி "என்ற படியே வாகனத்தை மருத்துவமனை நோக்கி செலுத்தினான்.
நேராக மாமனார் ராமன் சொன்ன ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தவன் பார்க்கிங்கில் தனது வண்டியை பார்க் செய்து விட்டு டோக்கன் பெற்று கொண்டபடியே மாமனாரை தேடினான்
அவனின் பார்வை ராமனை தேட ஹாஸ்பிட்டலில் முன்வாசல் அருகில் கைகளைப் பிசைந்தபடி ராமன் நின்றுகொண்டிருந்தார்..
இவனைப் பார்த்ததும் சற்று பதட்டம் தனிந்தவராக இவனை நோக்கி முன்வர இங்கிருந்தபடியே அவன் ஜாடை செய்தான் தாங்கள் வர வேண்டாம் நான் அங்கு வருகிறேன் என்று..
வேகமாக அவரின் அருகினில் வந்தவன் "மாமா அத்தைக்கு என்னாச்சு அத்தையை பார்த்தீர்களா "?என கேட்டபடியே ஐ சி யூ வில் வாசலில் அமர்ந்து இருந்த செவிலியப் பெண்மணியிடம் கேட்கச் சென்றான்.
அவர் "மாப்பிள்ளை பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லைங்க மாப்பிள்ளை. இப்பதான் நான் போய் பார்த்துட்டு வந்தேன்ங்க.. டாக்டர் ஒன்னும் பயப்படுற மாதிரி இல்ல பொழுதோட நார்மல் வார்டுக்கு மாத்தி போடலாம்னு சொல்லிட்டாங்க "என்று சொன்னார்.
"ஒஒஅப்படியா...சரி வாங்க போய் அத்தையை பாத்திட்டு வரலாம்"...என்றவன் ஐசியூவில் வாசலை நோக்கி சென்றான்…
அங்கு வாசலில் அமர்ந்திருந்த செவிலிய பணிப்பெண்
" சார் இப்போ பார்க்க முடியாது சார்"…
"ஏன் பாக்க முடியாது விசிட்டிங் ஹவர்ஸ் தானே?"
" இல்ல சார் விசிட்டிங் ஹவர்ஸ் 10.30இருந்து 11 மணி வரைஇன்னும் பத்து நிமிஷம் இருக்கு நீங்க வேணா டைம் பாருங்க "!!என கூறினாள்
உடனே தனது இடது கையின் மணிக்கட்டை தூக்கிப் பார்க்க மணி பத்து இருபது என்று காட்டியது…
இன்னும் பத்து நிமிடம் இருக்க சாருவை அழைக்கலாம் என மொபைலை எடுத்து அவளை அழைத்தான்…
அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வந்தது….மீண்டும் முயற்சி செய்ய அப்பொழுதும் அதையேக்கூற முகத்தில் சிறு எரிச்சல் தோன்றியது…
'இந்த நெட்வொர்க் இருக்கே...கேடு கெட்ட நெட்வொர்க்..என வாய்க்குள் முனுமுனுக்க'...அவனையே பார்த்தபடி ராமன்...நின்று கொண்டிருந்தார்..
"என்னங்க மாப்பிள்ளை சாருக்குங்களா போன் போட்டிங்க"? என்று கேட்டார்..
"ஆமா மாமா ஏன்னு தெரில ஃகால் போகல…நெட்வொர்க் கிடைக்கல போல மழைவேற அப்பப்போ வருதுல...அதான் நெட்வொர்க் கவராகல போல"..
"சரிவிடுங்க மாமா... மெசேஜ் பண்ணிருக்கேன்...பாத்ததும் கூப்பிடுவா...ஆமா அத்தைக்கு என்னாச்சி"?..எனக்கேட்டான்..
6
அரசு பொது மருத்துவமனை காலை மணி பத்து மாதவன் அனுப்பிவைத்த காவலர் பாரதியும் கேசவன் அனுப்பிவைத்த எட்டு முருகேசன் கைகளில் முதல் தகவல் அறிக்கையை வைத்தபடியே ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் ….
"ஏன் பாரதி உனக்கு தான் டியூட்டி முடிஞ்சது ல்ல அப்புறம் ஏன் வீட்டுக்கு போகல"... எனக்கேட்க...
அதற்கு பாரதி "இல்ல முருகேஷ் அண்ணா இந்த பொண்ணு கூட நான்தான் வந்தேன் என்னனு
தெரியல, மனசு ரொம்ப பாரமா
இருக்கு அண்ணா...
அதுமட்டுமில்லாம , அந்தப்பொண்ணு தலையில வேற ரத்தம் உறைந்து இருந்தது...அதனால நான் தான் தலைய பிடிச்சிட்டே வந்தேன்.வலிச்சிருக்கும் போல அண்ணா..
பொண்ணு கண்ணுல இருந்து
கண்ணீர் வந்துட்டே இருந்துச்சு..துடைச்சி விட்டுகிட்டே வந்தேன்.
மனசே கேக்கல. அதான் அந்த பொண்ணு எப்படி இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறமா போனேனா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்….எப்ஐஆர் ல என்ன அண்ணா எழுதிருக்கீங்க"?….
"என்னமா தெரியாத மாதிரி கேக்கற..
வழக்கம் போல தான்" ….
"அடையாளம் தெரியாத பெண் சாலையில் விபத்துனு தான் போட்டிருக்கு"...
"பாவம் அது வீட்ல தேடிட்டு கிடப்பாங்க...அது என்னனா இங்க அனாதை போல கிடக்கிது"…
"பாக்க சின்ன பொண்ணு போல இருக்கு...கழுத்தில தாலி மாதிரி ஏதாவது பாத்தியா பாரதி "?எனக்கேட்டார்..
"ம்ம்...கழுத்த பாக்கல ஆனா மெட்டி பாத்தேன் ..புதுசா இருந்தது அண்ணா..
ஒன்னு சமீபத்தில் திருமணம் ஆகி இருக்கணும் இல்லன்னா மெட்டி புதுசா வாங்கி போட்டு இருக்கணும் அந்த பொண்ணு"..
"பாவம் பொழச்சிட்டா பரவாயில்ல...யாரு என்னனு அது கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்..
இல்லனா இத கண்டு புடிக்கறது வேற புது தலைவலி" என்றார்..
"ஏன் அண்ணா இப்படி சொல்றீங்க? அந்த பொண்ணு நல்லபடியா வரட்டும் ஏனோ மனசே கேக்கல அந்த பொண்ணு மூஞ்சிய பாத்திருந்தா உங்களுக்கு இப்படி சொல்ல மனசு வராது அண்ணா… அப்படி ஒரு குழந்தைத்தனமான மூஞ்சி அண்ணா"..
"இப்படியும் நடுரோட்டில் அடிச்சு போட்டுட்டு போறாங்க இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் ஒன்னுமே செய்ய முடியாம போகும் போதுதான் சில
சமயம் ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம் இருக்கு"….என் ஆதங்கத்தில் பேசியவள்.
"மொதல்ல அந்த பொண்ணு நல்ல படியா பொழச்சி வரட்டும்...அப்புறம் அந்த பொண்ணே கீழே விழுந்ததா.. இல்லை யாராவது வண்டில இடிச்சாங்களானு தெரிஞ்சுக்கலாம்..
அது வரை நீ ஏன் பாரதி தேவையில்லாத கற்பனை பண்ணனும்"..என்றவர் அருகினில் இருந்த ஒரு ஸ்டூலில் அமரச் சென்றார்..
அதற்குள்ளாகவே பாரதி
"அண்ணா டாக்டர் வராரு"..
நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வெள்ளைக்கோர்ட்யை கழட்டிய படியே வந்து கொண்டு இருந்தார்.. இவர்களை பார்த்தவரின் முகமோ இருகிக்கிடந்தது..
அந்த இறுக்கத்துடனே இவர்களை நோக்கி வந்தவர் சம்பிரதாயமாக தலையசைத்தார்..
"ஹலோ டாக்டர் குட் மார்னிங்"..
"குட் மார்னிங் எப்ஐஆர்
போட்டாச்சா "?என்க்கேட்டவர்
"போட்டாச்சி டாக்டர்"
இப்போ அந்த பொண்ணுக்கு எப்படி இருக்குது டாக்டர்…
தொடரும்…...
அருமை அகி...
ReplyDeleteThanks akka
ReplyDelete